"பேப்பர் பாய்' சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் "பேப்பர் பாய்' படத்தின் படப்பிடிப்பு சென்னை வளசரவாக்கத்திலுள்ள கேரளா ஹவுசில் பூஜையுடன் தொடங்கியது.

Advertisment

இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கிவைத்தார். பி.எஸ்.ஜே. பழனிராஜன் படத்தைத் தயாரிக்கி றார். இணை தயாரிப்பு ஜி.சி. ராதா. இப்படத்தை இயக்குநர் விஜய் மில்டனிடம் "கடுகு', "கோலிசோடா-2' போன்ற படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஸ்ரீதர் கோவிந்தராஜ் இயக்குகிறார்.

paperboy

அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் வி. விஸ்வா, படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர்.

""தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற "பேப்பர் பாய்' படத்தின் ரீமேக் ஆகும். தமிழுக்குத் தகுந்தாற்போல் அதில் சிற்சிறு மாற்றங்களை உருவாக்கியுள்ளோம்.

அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர நாயகிக்கும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங் கள்தான் இப்படத்தின் கதை'' என்கிறார் ஸ்ரீதர் கோவிந்தராஜ்.

நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, "தலைவாசல்' விஜய், சுஜாதா, "கடலோரக் கவிதைகள்' ரேகா, "ராட்சசன்' பட வில்லன் சரவணன், எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், "தாரை தப்பட்டை' அக்ஷயா, பாலா, அமுதவாணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.